தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியை அங்கிகாரம் இல்லாத கட்சி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமமுக கட்சியினர், வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கம் அருகே, மு.க. ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மைகளின் மீது தண்ணீர் ஊற்று அணைத்தனர். இதனால் அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.