ETV Bharat / city

Palar River: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்: மீட்கக்கோரி போராடிய உறவினர்கள் - தீயணைப்பு துறையினர்

பாலாற்று வெள்ளத்தில் (Palar River) இரு சக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரை உடனடியாக தேடிக் கண்டுபிடிக்கும்படி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்‌.

ராணுவ வீரரை உடனடியாக தேடிக் கண்டு பிடிக்கும்படி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்‌.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்‌
author img

By

Published : Nov 23, 2021, 9:09 PM IST

வேலூர்: வடுகந்தாங்கல் மேல்விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(வயது 33). லடாக்கில் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்த இவர் 45 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊரான வடுகந்தாங்கலிற்கு வந்திருந்தார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்
இந்நிலையில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி மீண்டும் லடாக் செல்வதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேலூர் வந்துள்ளார். அப்போது, விரிஞ்சிபுரத்தில் உள்ள தரைபாலத்தை தனது இருசக்கர வாகனத்துடன் கடக்க முயன்றுள்ளார். அச்சமயம் பாலாற்றில் (Palar River) ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக நீரின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது ஆற்று வெள்ளத்தில் தனது இரு சக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுவரை அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. தீயணைப்புத்துறையினர் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், ராணுவ வீரர் மனோகரன் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

குடும்பத்தினர் போராட்டம்
இந்நிலையில், இன்று(நவ 23) காலை அவரது மனைவி திவ்யா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் அவரது உறவினர்கள் மற்றும் இந்து முன்னணியின் கோட்டத் தலைவர் மகேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தின் போர்டிகோவில் அமர்ந்து பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர் உடலை உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அலுவலர்கள் மற்றும் சத்துவாச்சாரி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அவர்கள் கலையாததால் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இன்று இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மனோகரனை தேடும் பணி நடைபெறும் என்றார்.

இதனைத் தொடர்ந்து ராணுவ வீரரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.