கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் தனியார் பள்ளியொன்று இயங்கி வருகிறது. அப்பள்ளி பேருந்துகள் மாணவர்களை ஏற்றி ஒன்றன் பின் ஒன்றாக வேகமாகப் போட்டி போட்டு வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதியது. இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 15 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இதில் 7 பேர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையிலும் 8 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் இரண்டு மாணவர்களை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
மீண்டும் பிணை மனு விண்ணப்பித்துள்ளோம் -பேரறிவாளன் தாய் தகவல்!