திருப்பத்தூர், ராணிப்பேட்டை என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (பிப். 26) கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்குதல், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வை 20 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு உயர்த்துதல், தங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு எங்களை விரைவில் அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்!