ETV Bharat / city

ஆங்கில புத்தாண்டு: புகழ்பெற்ற ஆலயங்களில் மக்கள் வழிபாடு - 27th Dharmapura aathinam

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

dharisanam
dharisanam
author img

By

Published : Jan 1, 2020, 11:38 PM IST

தஞ்சாவூர்

முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு சுவாமிமலை 'சுவாமிநாதன் சுவாமி திருக்கோயில்'. இந்தக் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

சுவாமிமலை முருகன் திருக்கோயில்

பல்வேறு வாகனங்களில் சுப்ரமணிய ஸ்வாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என்று முழங்கி முருகனை வழிபட்டனர்.

வேலூர்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயம்

இதே போன்று, திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் உள்ள வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றது. வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமியை மனமுருகி வழிபட்டனர்.

மயிலாடுதுறை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுர சைவ ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சமீபத்தில் பதவியேற்றார்.

ஆதீன மடத்தின் கீழ் வைத்தீஸ்வரன்கோயில், திருக்கடையூர், பரசலூர், வதான்யேஸ்வரர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம் உள்ளிட்ட 27ஆலயங்கள் அமைந்துள்ளன.

தருமபுர சைவ ஆதீனம் சுவாமி தரிசனம்

மடாதிபதி பதவியேற்றபின் ஆதீன மடத்தின் கீழ் உள்ள ஆலயங்களுக்கு விஜயம் செய்து தரிசனம் செய்துவருகிறார். அதன்படி, புகழ்பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். அவரை பாரம்பரிய முறைப்படி குதிரை சாரட் வண்டியில் ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் 54 நாதஸ்வர, மேளங்கள் முழங்க மல்லாரி இசை கச்சேரி உடன் பூர்ணகும்ப மரியாதையும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - கொடியேற்றத்துடன் தொடக்கம்

Intro:
தஞ்சாவூர் ஜன 01

முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான நான்காம் படை சுவாமிமலை சுவாமிநாத திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்Body:

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான நான்காம் படை சுவாமிமலை சுவாமிநாதன் சுவாமி திருக்கோவிலில் . காலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சுப்ரமணிய ஸ்வாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்று.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் புத்தாண்டை முன்னிட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.