ETV Bharat / city

வேலூரில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் ரோடு: வீடியோ வைரல் - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூரில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் ரோட்டின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரல்
வீடியோ வைரல்
author img

By

Published : Jun 28, 2022, 7:50 PM IST

வேலூர்: காளிகாம்பாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது இருசக்கர வாகனத்தை நேற்று இரவு வழக்கம் போல் தங்களது கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது.

அதோடு சேர்ந்து தெருவோரம் நிற்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை. பின்னர் போராடி உடைத்து வண்டியை எடுத்துள்ளார்.

வீடியோ வைரல்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கூறுகையில், "இது என்னோட தம்பி வண்டி தான். நேற்று இரவு 11.00 மணிவரை கடையில் தான் இருந்தோம். அதுவரை சாலை போடவுள்ளதாக எந்த அறிவிப்பும் வழங்கவில்லை. மாறாக இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர்.

அப்போது எங்களது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர். இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கின்றனர். இப்போது எங்கள் வண்டி நாசம் ஆகிவிட்டது. முன் அறிவிப்பு கொடுத்திருந்தால் வண்டியை தெருவில் விட்டிருக்க மாட்டோம். அல்லது அவர்களே வண்டியை அப்புறப்படுத்தியாவது சாலை போட்டிருக்கலாம்.

ஒரு வேலை மனிதன் உறங்கிக்கொண்டிருந்தால் கூட அவனுக்கும் சேர்த்தே சாலை போட்டிருப்பார்கள் போல. எங்கள் பகுதியில் போடப்பட்டு வரும் சாலை சுத்தமாக தரம் இல்லாமல் கடமைக்கு போடப்பட்டு வருகிறது. தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள். இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது. இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஸ்டாலின் கரூர் வருகை - செந்தில் பாலாஜி ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.