ETV Bharat / city

வித்தியாசமான பாணியில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளார்! - மக்களவை தேர்தல்

வேலூர்: சுயேட்சை வேட்பாளர் ஒருவர், பின்புறம் நோக்கி நடந்தபடியே வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சுயட்சை வேட்பாளார்
author img

By

Published : Jul 11, 2019, 7:12 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை பெறப்படுகிறது. முதல் நாளான இன்று வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த மணி(எ) மனிதன் என்பவர் வித்தியாசமான முறையில் பின்னால் திரும்பி நடந்தபடியே வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

குர்தா போன்ற உடை அணிந்திருந்த அவர் பின்புறமாக திரும்பி நடந்தபடியே சென்றதை கவனித்து அங்கிருந்த காவலர்கள், பொதுமக்கள் கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இந்தியா தற்போது பல்வேறு காரணங்களால் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது எனவே இந்தியா தலைநிமிரும் வரை நான் இதுபோன்று பின்புறம் நோக்கி நடந்தபடியே வந்துதான் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன்" என்றார்.

வித்தியாசமான பாணியில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயட்சை வேட்பாளார்!

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ், காந்தி வேடம் அணிந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவ்வாறு வேலூர் தொகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் மனு தாக்கல் செய்துவருகின்றனர்.

Intro:இந்தியா தலைநிமிலும் வரை பின்னால் திரும்பியபடி தான் நடந்து செல்வேன் - வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நபரால் வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு

Body:இந்தியா தலைநிமிலும் வரை பின்னால் திரும்பியபடி தான் நடந்து செல்வேன் - வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நபரால் வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 18ம் தேதி நிறைவடைகிறது. முதல்நாளான இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேட்சை வேட்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து மனு தாக்கல் செய்தனர் அந்தவகையில் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த மணி(எ) மனிதன் என்பவர் வித்தியாசமான முறையில் பின்னால் திரும்பி நடந்தபடியே வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்ததால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது குர்தா போன்ற உடை அணிந்திருந்த அந்த நபர் பின்புறமாக திரும்பி நடந்தபடியே சென்றதை கவனித்து அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இந்தியா தற்போது பல்வேறு காரணங்களால் தலைகுனிந்து போய் உள்ளது எனவே இந்தியா தலைநிமிரும் வரை நான் இதுபோன்று பின்புறம் நோக்கி நடந்தபடியே தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன்" என்றார் இதற்கிடையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர் ச
32வது முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று மனு தாக்கல் செய்ய வந்தார் ஏற்கனவே அவர் பாராளுமன்றத் தேர்தல்களில் 31 முறை போட்டியிட்டுள்ளதாக தெரிவித்தார் இதேபோல் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது ஆகியோரும் இன்று வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான சண்முகசுந்தரத்தின் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர் அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது முதல் நாள் வேட்புமனு தாக்கலின்போது பெரிய அளவில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை ஆனால் இம்முறை ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் என்பதால் தமிழகம் முழுதும் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர் இதன் மூலம் வேலூர் மக்களவை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.