ETV Bharat / city

ஊராட்சி மன்ற தலைவர்கள் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் சுப்பிரமணியன் - ஊராட்சி மன்ற தலைவர்கள் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
author img

By

Published : Dec 17, 2021, 8:57 AM IST

வேலூர்: காட்பாடியில் நேற்று (டிச.16) மாலை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து வீடுகள் தோறும் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிலுள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் ஆயிரத்து 325 ஊராட்சிகள் மட்டுமே 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அதே போல் 121 நகராட்சிகளில் 10 நகராட்சிகள் மட்டுமே 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே அனைத்து ஊராட்சிகளிலும் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எந்தெந்த ஊராட்சியில் 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி போடப்பட்டதோ, அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழாவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். விபத்து ஏற்படும் சமயங்களில் உயிரிழப்பை தடுக்க, இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற புதிய திட்டத்தை நாளை மறுநாள் மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க‌. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அதற்காக தமிழ்நாடு முழுவதும் 610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் விபத்து நடந்த பகுதியில் விபத்துக்குள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சையும் அளிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் கரோனா தொற்றை குறைக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 82 விழுக்காடு முதல் டோஸ் கரோனா தடுப்பூசியும், 52 விழுக்காடு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 93 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளது. எனவே பொதுமக்கள் நாளை மறுநாள் (டிச.18) நடைபெறும் தடுப்பூசி முகாம்களிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் முகாம்களிலும் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒமைக்ரான் மிக வேகமாக பரவக்கூடியது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி கொள்ளலாம்” என்றார்.

இதையும் படிங்க: 'தங்கமணி கிரிப்டோகரன்சியில் எத்தனை கோடியை முதலீடு செய்துள்ளார்' - விசாரணையில் சைபர் நிபுணர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.