ETV Bharat / city

கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது - அமைச்சர் துரைமுருகன்

author img

By

Published : Mar 26, 2022, 6:42 PM IST

மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், அணைக்கு கீழ் மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் கட்டக்கூடாது எனத் தெரிவித்துள்ளது என்றும் எனவே தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல் யாரும் ஒரு செங்கல்லை கூட கட்ட முடியாது என மேகதாது விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Minister Duraimurugan about Mekatatu Dam Issue

சென்னை: 75ஆவது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி வேலூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 'விடுதலைப் போரில் தமிழகம்' புகைப்பட கண்காட்சி இன்று (மார்ச் 26) நடைபெற்றது. இதனை, மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

இந்தப் புகைப்பட கண்காட்சியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் புகைப்படங்கள், அதன் முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை தொடக்கி வைத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது வேலூர் சிப்பாய் புரட்சிதான். விடுதலைப் போராட்டத்தில், மேலும் பல்வேறு சம்பவங்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, உண்மை வரலாற்றை நாம் பேணிக்காக்க வேண்டும்.

நாங்களும் உறுதியாக இருக்கோம்: தமிழ்நாட்டின் கலாச்சாரம், கலை நிகழ்ச்சிகளை பாதுகாக்க வேண்டும். புகைப்பட கண்காட்சியை ஒட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ அதை கட்டக்கூடாது என தமிழ்நாடு அரசும் உறுதியாக உள்ளது.

மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், அணைக்கு கீழ் மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் கட்டக்கூடாது என தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல் யாரும் ஒரு செங்கல்லை கூட கட்ட முடியாது. இந்த விஷயம் கர்நாடக அரசுக்கும் தெரியும். உச்சநீதிமன்றம் சொன்னாலும் நாங்கள் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொன்னால் இந்தியாவில் எங்கே ஒருமைப்பாடு உள்ளது. அப்போது மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது.

எப்போது மணல் குவாரி: எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு சாய்ந்து விடாது எனக் கருதிகிறேன். கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பயப்படவில்லை என்றால், மத்திய அரசும் அப்படி இருக்காது என நாங்கள் நம்புகிறோம். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்பு குழுவுக்கு என்ன அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்கும்" என்றார். தமிழ்நாட்டில் மணல் குவாரி எப்போது அமைக்கப்படும் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு? விரைவில் அறிவிப்பு வெளிவரும் எனத் துரைமுருகன் கூறினார்.

இதையும் படிங்க: அண்ணாமலை ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - திமுக சார்பில் நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.