வேலூர்: இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, வேலூரில் இன்று காலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்திய நில அதிர்வு தேசிய மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நிலநடுக்கம் வேலூருக்கு தெற்கு - தென்மேற்கில் 59.4 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வேலூரில் நிலநடுக்கம்: ஒரு வீடு சேதம் - குடியாத்தம் பகுதி செய்திகள்
வேலூரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![வேலூரில் நிலநடுக்கம்: ஒரு வீடு சேதம் ஒரு வீடு சேதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13765308-679-13765308-1638170223731.jpg?imwidth=3840)