வேலூர் மாவட்டம் கணியம்பாடி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.
இதைக் காண்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். காளைகள் ஒவ்வொன்றும் பயங்கர ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்தது.
குறைந்த நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்த காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் காளை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் அரசு வாகனம் ஓட்டும் திருநங்கை!