வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அக்ரவாரம் கிராமத்தில் முனியன் என்பவர் தனக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக மாவட்ட கண்பாளிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான காவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வாழை தோட்டத்தில் சுமார் 40 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்ததுள்ளது. அதன்பின் போலீசார் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதனிடையே உரிமையாளர் முனியன் தலைமறைவானார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜினாமா செய்து விட்டு கழகப் பணி ஆற்றுவோம் என்றேன்... யாரும் முன்வரவில்லை... ஓ. பன்னீர்செல்வம்...