ETV Bharat / city

கூட்டு பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை- மகிளா நீதிமன்றம் தீர்ப்பு! - vellore kottai

வேலூர் கோட்டையில் கடந்த ஆண்டு இளம்பெண் ஒருவரை கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கூட்டு பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை- மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

author img

By

Published : Apr 28, 2022, 7:27 AM IST

வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கடந்த 2020-ம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இளம்பெண்ணும், அதே கடையில் பணிபுரிந்த காட்பாடியைச் சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர்.

காதல்ஜோடி ஜனவரி மாதம் 18-ம் தேதி ஜவுளிக்கடையில் வேலை முடிந்த பின்னர் இரவில் கோட்டை பூங்காவிற்குச் சென்று அகழி கரையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இரவுநேரத்தில் காதல்ஜோடி தனியாக இருப்பதை அறிந்த 2-பேர் இளம்பெண்ணிடம் அத்துமீறினர்.

அதனைத் தடுத்த காதலனை அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவர்கள், இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்த கம்மலைப் பறித்தனர்.தொடர்ந்து 2-பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்கள்.

மூன்று குற்றவாளிகள் கைது: இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் பூங்காவை ஒட்டியுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வேலூர் கஸ்பாவை சேர்ந்த அட மணி(எ) மணிகண்டன் (வயது 41), வசந்தபுரத்தை சேர்ந்த சக்திவேல் (எ) கோழியும்(21), இளம்பெண் அணிந்த கம்மல் மற்றும் செல்போன்களை வாங்கி விற்ற தொரப்படியை சேர்ந்த கொய்யா(எ) மாரிமுத்து (31) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறை 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. இதையொட்டி மணிகண்டன், சக்தி, மாரிமுத்து ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை:கூட்டுப் பாலியல் வழக்கில் ஈடுபட்ட A1, அட மணி(எ)மணிகண்டனுக்கும்,A2 சக்திவேல்(எ)கோழிக்கும் ஆயுள் தண்டனை விதித்து 16 ஆயிரம் அபராதமும், பொருளை வாங்கி விற்ற கொய்யா(எ) A3 மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க:விக்னேஷ் லாக்கப் மரணம் விவகாரம் : விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.