வேலூர்: பெண் மருத்துவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், வேலூர் வடக்கு காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூரில் கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில், தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பான செய்தி நேற்று வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் வேலூர் வடக்கு காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலராக இருந்த ஜெயகரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான தகவல்களை, உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவில்லை என்றும், பணியில் அலட்சியமாக இருந்ததாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்ததால், ஜெயகரனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்: தமிழ்நாட்டிற்கு எதிராக கர்நாடகா தீர்மானம் நிறைவேற்றம்