வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று (ஜன. 20) மாலை வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புக்கார தெரு, தோட்டப்பாளையம் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 15க்கும் மேற்பட்ட கடைகளிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான சுமார் 30 கிலோ எடை உடைய எச்சரிக்கை குறியீடு இன்றி விற்பனை செய்யப்பட்ட சிகரெட், நிக்கோடின் பொருள்களும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 25 ரோல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் எச்சரிக்கை குறியீடு இன்றி விற்பனை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் நிக்கோடின் பொருள்கள் விற்பனை செய்ததற்காக ஒவ்வொரு கடைக்கும் 5 ஆயிரமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்ததற்காக 2 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க...வீட்டிற்குள் 400 போன்சாய் மரங்கள் வளர்த்து அசத்தும் சுலைமான்