ETV Bharat / city

காவல் உதவி ஆய்வாளர் எனக்கூறி மோசடி... விடுதியில் சிக்கிய பெண்... - fake police in vellore

வேலூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் எனக்கூறி மோசடி செய்துவந்த பெண் கைது செய்யப்பட்டார்.

fake-woman-sub-police-inspector-arrested-in-vellore

author img

By

Published : Mar 1, 2022, 6:51 AM IST

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றின் மேலாளர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், காவல் உதவி ஆய்வாளர் எனக்கூறி பெண் ஒருவர் நீண்ட நாள்களாக விடுதியில் வாடகை கொடுக்காமல் தங்கியிருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டபோது, அந்த பெண் சென்னையை சேர்ந்த ரோகிணி என்பதும், போலி ஆவணம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் எனக்கூறி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், "சென்னையை சேர்ந்த ரோகிணி என்பவர் தான் காவல் உதவி ஆய்வாளர் என்றும் குறைந்த விலையில் சொகுசுகார் வாங்கிதருவதாகவும் கூறி ஆற்காட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ.21 லட்சமும், தொரப்பாடியை சேர்ந்தவர் ஒருவரிடம் இருந்து ரூ.17 ஆயிரமும் பெற்று மோசாடி செய்துள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.