ETV Bharat / city

மேடையில் வைத்து மகனை எச்சரித்த துரைமுருகன் - Duramurugan who warned his son on the Vellore meeting

வேலூர்: யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார்.

மேடையில் வைத்து மகனை எச்சரித்த துரைமுருகன்
மேடையில் வைத்து மகனை எச்சரித்த துரைமுருகன்
author img

By

Published : Jan 27, 2020, 11:35 PM IST

வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், "அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர்" என்று பேசினார்.

மேடையில் வைத்து மகனை எச்சரித்த துரைமுருகன்

அதற்கு துரைமுருகன் பதிலளிக்கையில், "வேலூர், அணைக்கட்டுத் தொகுதிகளில் எம்.எல்.ஏ-வுக்கு யார் நிற்பது என்று முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கும் ஸ்டாலினுக்கும்தான் இருக்கிறது. இப்போதைய எம்.எல்.ஏ-க்களை `நிரந்தர சட்டமன்ற உறுப்பினர்’ என்று என் மகன் கதிர் ஆனந்த் பேசியிருக்கிறார். நீ சொல்வதைப்போல் சட்டமன்றத் தொகுதியை நிரந்தரமாக்கிவிட்டால் அவர்கள் எங்களை மதிப்பார்களா? எம்.பி சீட்டுக்கு உன்னை முடிவுசெய்வதற்காக நான் பட்ட பாடே இன்னும் தீரவில்லை" என்றார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டிஎன்பிஎஸ்சி தேர்வில் பலகாலமாக ஊழல் நடைபெறுகிறது. ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், திமுக உறுப்பினர்களுக்கு நிதி கொடுக்க முடியாது என அமைச்சர் கருப்பணன் பேசியது குறித்து கேள்விக்கு, "அமைச்சர் கருப்பணன் பேசியது தவறு, திமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணம் இல்லை என்று கூறுவது என்ன அவரது அப்பா வீட்டு பணமா அரசாங்கத்தின் பணம் ஆகையால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக வென்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

Intro:வேலூர் மாவட்டம்

யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்யவும்

மேடையில் வைத்து மகனை எச்சரித்த துரைமுருகன்

Body:வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திமுக பொருளாளரும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் தந்தையுமான துரைமுருகன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காந்தி நந்தகுமார் ஈஸ்வரப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் பேசும்போது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரை பார்த்து நீங்கள்தான் அணைக்கட்டு தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் என்று பேசினார் இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேசுகையில், " துரைமுருகன் என்னவோ என்னுடன் இருப்பதை நினைத்து இங்கே நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் என்றார் அப்படி என்றால் அவருக்கு சீட்டு உறுதி ஆகி விட்டது என்று அர்த்தமா ? இங்கு நீ சீட்டை உறுதி செய்துவிட்டால் அவர்கள் என்னை மதிப்பார்களா? ஆகையால் யார் சட்டமன்ற உறுப்பினர் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் உன்னை முடிவு பண்ணியே நாங்கள் பட்ட பாடு இன்னும் தீரவில்லை இதில் இன்னொருவரை முடிவு பண்ணவா எனவே முடிவு செய்யும் அதிகாரம் தளபதிக்கு உண்டு அதற்கு துணை நிற்கும் அதிகாரம் எனக்கு உண்டு முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அதுதான் வித்தியாசம் நான் நேற்று இரவு தான் இந்த விழா அழைப்பை பார்த்தேன் நாம் ஒரு தோழமை கட்சியில் இருக்கின்றோம் எனவே இதில் காங்கிரஸ் முஸ்லிம் லீக் கம்யூனிஸ்ட் தோழர்கள் தலைவர்களின் பெயர்களை எல்லாம் நான் இருந்திருந்தால் சேர்த்திருப்பேன் அதுதான் முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வித்தியாசம் இருந்தாலும் பெருந்தன்மையோடு இங்கே வந்து பேசிய தோழமைக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் ஏற்கனவே கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு எடுத்துக்கொண்டது சுகாதாரத்திலும் தற்போது கை வைக்கிறார்கள் இதே போக்கு நீடித்தால் நாளைக்கு காவல்துறையிலும் நிதி நிலைமையிலும் கை வைத்து விடுவார்கள் அப்படியானால் மாநில அரசுகள் பஞ்சாயத்து போர்டை விட கேவலமாக இருக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பலகாலமாக ஊழல் செய்து கொண்டவர்கள் மாட்டியுள்ளார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து திமுக உறுப்பினர்களுக்கு நிதி கொடுக்க முடியாது என அமைச்சர் கருப்பணன் பேசியது குறித்து கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் கருப்பணன் பேசியது தவறு திமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணம் இல்லை என்று கூறுவது என்றால் அது என்ன அவரது அப்பா வீட்டு பணமா அரசாங்கத்தின் பணம் ஆகையால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம். தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது தான் தமிழர்களின் கோரிக்கை ஆகும் என்றார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.