நிவர் புயலின் தாக்கத்தால் கடும் மழை பெய்ததைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் கரைபுரண்ட வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில், விருதம்பட்டு பாலாற்று கரையை ஒட்டியுள்ள பகுதியில், ஆற்று நீரில் நாய்க்குட்டிகள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தன. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். உடனே அங்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர், பாலத்தின் மேல் இருந்து கயிறு மூலம் இறங்கி, நீரில் சிக்கித்தவித்த நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்டனர்.
காட்பாடி தீயணைப்பு வீரரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: இரண்டு கால் நாய்க்கு இன்ப வாழ்வை காட்டிய இளம் பெண்!