வேலூர்: அனுமதியின்றி போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் நேற்று(நவ. 20) அனுமதியின்றி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து நேற்று (நவ. 20) வேலூர் தெற்கு காவல் நிலையம் எதிரில் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பா.கார்த்திகேயன் உள்பட சுமார் 30 தி.மு.கவினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.