ETV Bharat / city

அம்மா பிரியாணி உரிமையாளர் வீட்டில் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு - vellore district news

வேலூர்: அம்மா பிரியாணி உரிமையாளர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
author img

By

Published : Nov 25, 2020, 1:59 PM IST

வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா பிரியாணி கடையின் உரிமையாளர் மோகன் வீட்டில், நவம்பர் 22ஆம் தேதி 250 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் திருடு போனது.

இதுகுறித்து அவரது மகன் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக காவல் துணை தலைவர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்தனர்.

சிசிடிவி காட்சி

திருட்டு நடந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. எனவே அவரது வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சியை காவல் துறையினர் பார்த்தனர்.

அதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து சுவர் ஏறி குதித்து பணம், நகைகளை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சியை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

தற்போது திருட்டில் தொடர்புடைய இரண்டு பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.