ETV Bharat / city

காளை வாயுபுத்திரன் முதலாம் ஆண்டு நினைவாக எருது விடும் விழா - Tirupattur latest bullrace

திருப்பத்தூர்: பிரபல காளை வாயுபுத்திரன் என்ற காளையின் முதலாம் ஆண்டு நினைவாக நடைபெற்ற எருது விடும் விழாவில் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

திருப்பத்தூர் மாவட்டம் எருது விடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் எருது விடும் விழா
author img

By

Published : Jan 31, 2020, 5:15 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத் குமார் அவர்களின் காளை, வாயுப்புத்திரன். அதிக ரசிகர்களை கொண்ட வாயுபுத்திரன் காளையானது கடந்த ஆண்டு நிம்மியம்பட்டு எருது விடும் திருவிழாவில் பங்கேற்று கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. அந்தக் காளையின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற எருது விடும் விழாவில் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, போன்ற மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

காளை வாயுபுத்திரன் முதலாம் ஆண்டு நினைவாக எருது விடும் விழா

அரசு விதிப்படி வீதியின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்ததையொட்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத் குமார், வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம், காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி ஆகியோர் பார்வையிட்டு தொடங்கி வைத்தனர். இதில் குறைவான நொடியில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 77,777, இரண்டாம் பரிசாக ரூ. 55,555, மூன்றாம் பரிசாக ரூ. 44,444 என 31 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த எருது விடும் விழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை கண்டு களித்தனர்.

இதையும் படிக்க:மஞ்சுவிரட்டு: காளையர்களை விரட்டியடித்த காவலர்கள்

Intro:Body:வாணியம்பாடி அருகே பிரபல காளை வாயுபுத்திரன் என்ற காளையின் முதலாம் ஆண்டு நினைவாக நடைபெற்ற எருது விடும் விழாவில் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத் குமார் அவர்களின் காளையான அதிக ரசிகர்களையும் கொண்ட வாயுபுத்திரன் என்ற காளையானது கடந்த ஆண்டு நிம்மியம்பட்டு எருது விடும் திருவிழாவில் பங்கேற்று கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.

அந்தக் காளையின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைப்பெற்ற எருது விடும் விழாவில் ஆந்திரா மற்றும்  கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டை,
மாவட்டங்களில் இருந்து  ஆலங்காயம் வாணியம்பாடி ஆம்பூர்,ஓசூர்   குடியாத்தம்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்  300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

அரசு விதிப்படி வீதியின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருபதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத் குமார் ,வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ,வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி ஆகியோர் பார்வையிட்டு தொடங்கி வைத்தனர். இதில் குறைவான நொடியில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு 77777, இரண்டாம் பரிசு 55555,, மூன்றாம் பரிசு 44444 என 31 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை கண்டு களித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.