வேலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பிச்சாண்டி - தீபா தம்பதியின் மகன் சந்துரு(13). லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சந்துரு, பள்ளி விடுமுறை என்பதால் அவரது அம்மாவுடன் துணி துவைப்பதற்காக வீட்டின் அருகேயிருந்த குளத்திற்குச் சென்றுள்ளார்.
சிசிடிவில் சிக்கிய செயின் கொள்ளையர்கள்!
நீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் அக்கம்பக்கத்தினரை அழைப்பதற்குள் தாயின் கண்முன்பாகவே சந்துரு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிப்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.