ETV Bharat / city

புகையில்லா போகியை வலியுறுத்தி பள்ளிக் குழந்தைகளின் பேரணி

புகையில்லா போகி பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பள்ளிக் குழந்தைகளின் பேரணி நடைபெற்றது.

bhogi
bhogi
author img

By

Published : Jan 13, 2020, 8:21 PM IST

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் அரசு உதவிபெறும் பள்ளி சார்பில், புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட வலியுறுத்தி, பள்ளிக் குழந்தைகளின் பேரணி நடைபெற்றது. பேரணியை தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தார்.

பிளாஸ்டிக்கை எரிப்பதால் காற்று மாசு ஏற்படும், பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது.

பள்ளி மாணவ, மாணவிகளின் புகையில்லா விழிப்புணர்வு பேரணி

பேரணியில் பள்ளிக்குழந்தைகள் 200பேர் பாரம்பரிய முறையில் வேட்டி, சேலைகள் அணிந்து, கைகளில் கரும்புகளை ஏந்தியபடி பங்கேற்றனர். சுற்றுச்சூழலை பாதுகாப்போம், காற்று மாசு தவிர்ப்போம் என்று கோஷங்கள் எழுப்பியபடி பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கி பேரணி முக்கிய வீதிகள் வழியேசென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

திருவள்ளூர்

கடம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ’புகையில்லா போகியை கொண்டாடுவோம்’ என்று வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ‘எரிக்க மாட்டோம், எரிக்க மாட்டோம். பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க மாட்டோம்’ என கோஷங்கள் எழுப்பிய வண்ணம் பேரணியாக சென்றனர்.

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தும் மாணவர்கள்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., "நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த, தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்தனர். ஆனால், தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம், ரசாயனப் பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

bhogi
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

எரிக்கப்படும் பொருள்களில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகள் நிகழ்வதற்கும் காரணமாய் அமைகிறது.

எனவே போகிப் பண்டிகையின் போது, தீங்கிழைக்கும் பழைய பொருள்கள் எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புகையில்லா போகி கொண்டாட்ட விழிப்புணர்வு பேரணி

Intro:கையில் கரும்புடன், பாரம்பரிய வேஷ்டி, சேலை அணிந்து, பள்ளிக்குழந்தைகள், புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட வலியுறுத்தி பேரணி:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் அரசு உதவிபெறும் பள்ளி சார்பில், புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட வலியுறுத்தி, பள்ளிக்குழந்தைகள் பேரணி நடைபெற்றது. தருமபுரத்தில் நடைபெற்ற பேரணியை தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேரணியை துவக்கிவைத்தார். பிளாஸ்டிக்கை எரிப்பதினால், காற்று மாசு ஏற்படும் என்பதை குறித்தும், பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில், பள்ளிக்குழந்தைகள் 200பேர் பாரம்பரியமான முறையில் வேஷ்டி, சேலைகள் அணிந்து, கைகளில் கரும்புகளை ஏந்தியபடி, பேரணியில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்போம், காற்று மாசை தவிர்ப்போம் என்று கோஷங்கள் எழுப்பியபடி பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியே மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.