வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அகரம்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி விஜயா. நிறைமாத கர்ப்பிணியான விஜயா, பெங்களூரிலிலுள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று, சென்னை செல்லும் பிருந்தாவன் ரயிலில் மீண்டும் ஆம்பூர் வந்தார்.
ஆம்பூர் ரயில் நிலையத்தை நோக்கி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ரயில் வந்துக் கொண்டிருந்தபோது விஜயாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதைப் பார்த்த சக பயணிகள் உதவியுடன், அவரது தாயார் இளம்பெண்ணை ரயில் நிலையத்திற்கு கொண்டு அழைத்து வந்து பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை, தாயை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர்.
இதையும் படிங்க: தமிழ் மொழி அழகானது - பிரதமர் மோடி ட்வீட்