வேலூர் மாவட்டம் ஆம்பூர், ரெட்டித் தோப்பு பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடையில்விற்பனையாளர் ஹிதாயத்துல்லா, ஊழியர் கனகராஜ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாங்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்த அல்தாப் என்பவர் கடைக்கு வந்து வரிசையில் நிற்காமல், ரசீது கொடுக்காமல் உடனடியாக தனக்கு உணவு பொருட்களை வழங்குமாறு கனகராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பொருட்களை தர மறுத்த கனகராஜை தாக்கிவிட்டு, கோபத்தில் மேலும் கடையிலிருந்த எடை காட்டும் இயந்திரத்தை கீழே போட்டு உடைத்து, அரிசி மூட்டைகளை சேதப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்து கடை ஊழியர் கனகராஜ் ஆம்பூர் காவல்நிலையத்தில் அல்தாப் மீது புகார் அளித்தார். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.