ETV Bharat / city

Farm Laws: வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது காலம் கடந்த முடிவு: திருமாவளவன் - வேளாண் சட்டம் வாபஸ்

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது காலம் கடந்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். ஆனாலும் கூட எவ்வளவோ விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் போராட்டத்தை பிரதமர் புரிந்து கொள்வதற்கு ஒர் ஆண்டு ஆகிவிட்டது திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பேட்டி
திருமாவளவன்
author img

By

Published : Nov 19, 2021, 10:59 PM IST

திருச்சி: அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள ரயில்வே மண்டல பல்துறை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர், ”வேளாண் சட்டங்கள் (Farm Laws) வாபஸ் பெறப்பட்டது காலம் கடந்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். ஆனாலும் கூட எவ்வளவோ விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் போராட்டத்தை பிரதமர் புரிந்து கொள்வதற்கு ஒர் ஆண்டு ஆகிவிட்டது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ”உண்மையாக இதற்காக போராடி எத்தனையோ விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உயிர்ச் சேதங்கள், பொருள்ச் சேதங்கள் பெரிய அளவில் ஆனது. உத்தரகாண்ட், மணிப்பூர் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் பிரதமர் நரேந்திர மோடி இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளார். இருந்தாலும்கூட இது விவசாயிகளின் வெற்றி. எந்த ஒரு அரசியல் கட்சியும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது” எனவும் கூறினார்.

நீட் விவகாரத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்கள் குறிப்பாக வட மாநிலங்களில் பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை. ஆனால் தமிழகம் தான் முழுவதுமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று திருமாவளவன் கூறினார்.

இதையும் படிங்க:மருத்துவம் இந்தியா வெற்றி பெற வேண்டிய துறை - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.