ETV Bharat / city

தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு - தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை

திருச்சி: தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை தனலட்சுமிக்கு ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

warm welcome for national level athletic competition winners
தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
author img

By

Published : Mar 22, 2021, 8:31 AM IST

தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்ற 20 தமிழர்கள்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24ஆவது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் போட்டிகள் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியில் திருச்சியில் இருந்து மட்டும் 20 பேர் பங்கேற்றுள்ளனர்.

சாதனை வெற்றியுடன் தங்கம் வென்ற திருச்சி மங்கை

இந்நிலையில், தேசிய தடகளப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாதனை புரிந்துள்ளனர். பெண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். இவர் 100 மீ தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்துள்ளார்.

பி.டி. உஷா சாதனை முறியடிப்பு

தனலட்சுமி, சில நாள்ளுக்கு முன் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார். மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையையும் முறியடித்தார்.

சர்வதேசப் போட்டிக்கு தகுதி

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் சாதனை புரிந்த இவர், தற்போது தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து, சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றுள்ளார்.

இதே போல் ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த திருச்சி ரயில்வே ஊழியரான தடகள வீரர் இலக்கியதாசன் வெள்ளிப்பதக்கம், 200 மீட்டர் ஒட்டத்தில் தங்கப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவருடன் விக்னேஷ் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் பதக்கம் பெற்றார். இவர்கள் மூவரையும் திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினர், மக்கள் சக்தி இயக்கத்தினர், பொன்மலை ரயில்வே மைதானம் வீரர்கள் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு

இந்த வீரர்கள் அனைவரும் திருச்சி ரயில் நிலையத்துக்கு நேற்று (மார்ச் 20)இரவு வந்தடைந்த நிலையில், திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.