ETV Bharat / city

வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா - வேப்பிலை மாரியம்மன் கோயில்

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா
author img

By

Published : May 15, 2022, 12:27 PM IST

திருச்சி: மணப்பாறையில் பிரசித்தி பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டின் திருவிழா கடந்த மே 1 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் விழா இன்று (மே.15) அதிகாலை ஐந்து மணிக்கு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. இதில், மணப்பாறை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்து கோயிலை வலம் வந்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

சித்திரைத் திருவிழா

மேலும், திருவிழாவிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.