ETV Bharat / city

கட்சி பேனர், பரிசுப் பொருட்களின்றி வடமாடு மஞ்சு விரட்டு! - திருச்சிராப்பள்ளி

தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் வடமாடு மஞ்சு விரட்டு போட்டியில் கட்சி பேனர், பரிசுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

vada maadu manju virattu in trichy
vada maadu manju virattu in trichy
author img

By

Published : Mar 1, 2021, 4:45 PM IST

திருச்சி: மணப்பாறையில் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள் மற்றும் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது.

இதில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட காளைகள் களமாடின. மாடு ஒன்றிற்கு 9 வீரர்கள் வீதம், கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் காளைகளை அடக்கினர். வடத்தில் இணைக்கப்பட்டுள்ள காளைகள் களத்தில் உள்ள வீரர்களைக் கலங்கடித்தன.

இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் தேர்தல் நன்னடத்தை விதிமுறையால் பரிசுப் பொருட்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. இப்போட்டியைச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.