ETV Bharat / city

திருச்சி அருகே இடி தாக்கி இருவர் உயிரிழப்பு - துறையூர் அரசு மருத்துவமனை

முசிறி அருகே வாளசிராமணி கிராமத்தில் மின்வாரிய ஊழியர்கள் இருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவர் உயிரிழப்பு
இருவர் உயிரிழப்பு
author img

By

Published : Apr 14, 2022, 9:51 AM IST

திருச்சி மாவட்டம் தா.பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேன் ஆக வேலை பார்த்து வருபவர்கள் வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (31), தெற்கு தவளபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல்(35). இவர்கள் இருவரும் முசிறி அருகே உள்ள வாளசிராமணி கிராமத்தில் மின்கம்பங்கள் நடும் பணி முடித்து விட்டு இரவு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, லேசான தூரல் மழைப் பெய்துள்ளது. லேசாகப் பெய்த மழை பின், கனமழையாகப் பெய்யத் தொடங்கியது. இந்நிலையில், பைக்கில் சென்று கொண்டிருந்த இருவரையும் திடீரென மின்னல் ஒன்று தாக்கியது.

இதில், விஜய் மற்றும் பழனிவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இருவரது சடலத்தையும் தா.பேட்டை போலீசார் கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனை செய்ய அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: கொளுத்தும் கோடையை தணிக்க தமிழ்நாட்டில் மழை வரப்போகிறது!..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.