ETV Bharat / city

திருச்சி எஸ்எஸ்ஐ கொலை: குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கின் முதல் குற்றவாளி மணிகண்டன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றவாளி   குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
திருச்சி எஸ்எஸ்ஐ கொலை
author img

By

Published : Dec 18, 2021, 5:07 PM IST

திருச்சி: நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (56). இவர் (நவ. 20) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, பூமிநாதன் நவல்பட்டு மெயின்ரோட்டில் மூன்று இருசக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்த முயற்சித்தார். அவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர்.

ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களை தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிசென்றார். அந்த நபர்கள் திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் களமாவூர் ரயில்வே கேட் அருகே பள்ளத்துப்பட்டி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

உயிரிழப்பு

அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்திய பூமிநாதன், அதில் பயணித்த இரண்டு நபர்களை பிடித்தார். தப்பிச்சென்ற மற்றவர்கள் தங்கள் வாகனத்தில் திரும்பி வந்து பூமிநாதனிடம் தகராறு செய்து, பிடிபட்ட நபர்களை விடுவிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், பூமிநாதன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினர். படுகாயமடைந்த பூமிநாதன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, ஆடுகளை திருடிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் அதிகாலை சுமார் அதிகாலை இரண்டு மணியளவில் நடந்துள்ளது. எனினும், அதிகாலை ஐந்து மணியளவில் தான் அவ்வழியாக சென்றவர்கள், உதவி ஆய்வாளர் உடலை கண்டுள்ளனர். இதுகுறித்து, அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

திருச்சி எஸ்எஸ்ஐ பூமிநாதன்
திருச்சி எஸ்எஸ்ஐ பூமிநாதன்

எட்டு தனிப்படைகள்

இதுதொடர்பாக , வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் எட்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

காவலர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்கள் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களது செல்போன் பதிவுகளை ஆய்வுசெய்த காவலர்கள், அவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 10 வயது சிறுவன், 17 வயது சிறுவன் உள்பட மொத்தம் மூவரை தனிப்படையினர் (நவம்பர் 22) கைது செய்தனர்.

திருச்சி எஸ்எஸ்ஐ கொலை
திருச்சி எஸ்எஸ்ஐ கொலை

ஜாமின் மனு தள்ளுபடி

எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கின் முதல் குற்றவாளி மணிகண்டனை ஜாமினில் விடுவிக்கக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் மணிகண்டனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மாவட்ட ஆட்சியர் கவிதாவுக்கு பரிந்துரை செய்தார்.

குற்றவாளி மணிகண்டன்  சிறையில் அடைப்பு
குற்றவாளி மணிகண்டன் சிறையில் அடைப்பு

குண்டர் சட்டத்தின் கீழ் கைது

இந்நிலையில் முதல் குற்றவாளியான மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டனை கீரனூர் காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Bigg Boss 5 இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.