ETV Bharat / city

குதூகலமாக குளித்த கோயில் யானைகள்

author img

By

Published : Jan 28, 2022, 4:22 PM IST

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் நடைபயிற்சி செய்து பிரமாண்ட குளத்தில் குளித்து, மகிழ்ச்சியுடன் நீரில் விளையாடின.

ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் நடைபயிற்சி செய்து பிரமாண்ட குளியல்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ஆண்டாள் மற்றும் பிரேமி (எ) லெட்சுமி ஆகிய இரு யானைகள் தினசரி விஸ்வரூப பூஜை மற்றும் திருவிழா நாள்களில் பங்கேற்று கைங்கர்யப் பணிகள் செய்து வருகின்றன.

யானைகளுக்கு இயற்கை உணவுகள் மற்றும் சமைத்த உணவுகள் மருத்துவர்களின் ஆலோசனைகள்படி வழங்கப்பட்டு வருகிறது. மாதம் இருமுறை கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் நலம் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் வனத்துறை அலுவலர்களிடம் உரிய கால இடைவெளியில் ஆலோசனைகள் பெறப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இத்திருக்கோயில் வடக்குப்புறம் கொள்ளிடம் அருகே பஞ்சக்கரை சாலையில் இயற்கை சூழலில் அமைந்துள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமாக உடையவர் தோப்பு சுமார் 5.48 ஏக்கரில் அமைந்துள்ளது.

இத்தோப்பில், இத்திருக்கோயில் யானைகளுக்கு குளியல் தொட்டி சுமார் 3.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவிலும் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஒரு சுற்றுக்கு 857 மீட்டரில் நடைபாதையும், திருக்கோயில் நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

சராசரியாக மூன்று நாளைக்கு ஒரு முறை குளியல் தொட்டியில் நீராடி மகிழவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தினசரி திருக்கோயிலிலிருந்து சுமார் 1.100கி.மீட்டர் தொலைவிலுள்ள ஷை தோப்பிற்கு இரண்டு யானைகளும் தோப்பிலுள்ள வட்டப்பாதையில் மட்டும் குறைந்தபட்சம் 5.00 கி.மீ அளவிற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி முடிந்த பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு திருக்கோயில் யானைக் கூடத்திற்கு நடைப்பயிற்சியாகவே வந்து சேரும். இதனால் யானைகளுக்கு நானொன்றுக்கு வழக்கமான பணிகளுடன் சேர்ந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்திற்கு செய்யப்பட்டுள்ளது. மேல் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் குளிக்க வைத்து பார்க்கப்பட்டது. அப்போது கோயில் யானைகள் உள்ளே உற்சாக குளியல் போட்டு யானைகள் இரண்டும் ஒருவருக்கொருவர் நீரை தும்பிக்கையால் பீச்சி அடித்தும், ஆனந்தமாக நீரில் விளையாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

இதையும் படிங்க: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.