திருச்சி: திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் திருவரங்கத்தை சொல்வர். திருவரங்கம் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ள திருவரங்கம் எனும் ஊர் ”ஸ்ரீரங்கம்” என்றும் அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் இது.ஏழு மதில்கள் சூழ, வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப்பெரிதான ராஜகோபுரம் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44ஆவது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமானப்பணிகள் 1979-ல் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடனும் 236 அடி உயரத்தில் 1987ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இது 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. திருவரங்கம் கோயிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966-ல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழில்நுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ் ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது.
இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் உள்ள கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017ஆம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இக்கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6 லட்சத்து 31 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச்சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும்.
இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப்பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. கோயிலின் அனைத்து கோபுரங்களும் வண்ணத்தில் இருக்க, கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கோபுரம் மட்டும் வெள்ளையாக இருப்பதற்கு காரணம் என்ன...? ஈடிவி பாரத் தமிழ்நாடு நேயர்களுக்காக....
இதையும் படிங்க: ரீடிங் மாரத்தான் - தமிழக மாணவர்கள் உலக சாதனை