ETV Bharat / city

’கட்சியின் செல்வாக்கை பேனர்களை வைத்து எடை போட முடியாது’ - திருநாவுக்கரசர் எம்.பி. - காங்கிரஸ், திமுக கூட்டணி

திருச்சி: அரசியல் கட்சி மற்றும் அரசியல் தலைவர்களின் செல்வாக்கை பேனர்களை வைத்து எடை போட முடியாது என்று திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருச்சி எம்பி திருநாவுக்கரசரின் செய்தியாளர்கள் சந்திப்பு
author img

By

Published : Sep 16, 2019, 7:17 PM IST

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்.பி. அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது. இந்த அலுவலகத்தை திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருநாவுக்கரசர், "பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் பேனர்களை தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

எனினும் இதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். பேனர்களை வைத்து கட்சி, அரசியல் தலைவர்களின் செல்வாக்கை எடை போட முடியாது. அரசியல்வாதிகள் பேனர்களில் வாழ்ந்தாலும் மக்களிடம் வாழந்துவிட முடியாது என்பதை கருத்தில் கொண்டு பேனர்களை தடைசெய்ய வேண்டும்.

ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பலர் வேலையிழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே ஒரு கோடி பேர் வேலை இல்லாமல் உள்ளனர். மத்திய பாஜக அரசிடம் திட்டமிடல் இல்லாத காரணத்தால்தான் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கை, பொருளாதார நெருக்கடியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.

அடுத்தடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிய அவர், "உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சி, சின்னம் இல்லாத பஞ்சாயத்துகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும். அரசியல் கட்சி, சின்னம் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து போன்ற இடங்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். திமுக-காங்கிரஸ் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேட்டி

இந்தியாவில் இந்தி பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று அமித் ஷா கூறியது கண்டிக்கத்தக்கது. இது தவறான புள்ளி விவரம் ஆகும். இந்துக்கள் அதிகமாக இருப்பதால் இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை நிலைநாட்ட பாஜக அரசு நினைக்கிறது. மக்கள் விருப்பத்தை மீறி எதுவும் திணிக்க முடியாது. அவ்வாறு செய்தால் தேவையற்ற போராட்டங்கள், வன்முறைகளுக்கு வழிவகுக்கும்.
ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தேவையற்றது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உள்ளது. இது போதுமானதாகும். தேர்வுமுறை மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கக் கூடாது. இதன்மூலம் மேற்படிப்பு பாதிக்கும். ஒழுங்குபடுத்துவதற்கு தேர்வுமுறை தேவைதான். அதற்காக குழந்தைகளின் எதிர்காலத்தை முடக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Body:திருச்சி: அரசியல் தலைவர்களின் செல்வாக்கை பேனர்கள் மூலம் எடை போட முடியாது என்று திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்பி அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது. திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக மாநகரச் செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதன்பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில்,
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் பேனர்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதே கருத்தை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்துகிறது. எனினும் இதற்கு சட்டபூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். முதல்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, போக்குவரத்து அதிகமுள்ள பகுதுகளில் உடனடியாக பேனர்களுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் உள்ளதுபோல் கட் அவுட் கலாச்சாரம் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். கட்சியின் பலத்தை நிரூபிப்பதற்கு பயனர்கள் முகாந்திரம் கிடையாது. முந்தைய காலத்தில் தொண்டர்கள் தான் பேனர்கள் வைத்தார்கள். ஆனால் தற்போது அதற்கென உள்ள ஏஜென்ட்கள் தான் வைக்கிறார்கள். பேனர்களை வைத்து கட்சி மற்றும் அரசியல் தலைவர்களின் செல்வாக்கை எடை போட முடியாது. பேனர்களில் வாழ்ந்தாலும் மக்களிடம் வாழந்துவிட முடியாது.
மக்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் பேனர்களை தடை செய்ய வேண்டும்.
நாடு தற்போது பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஜிஎஸ்டி வேண்டாம் என்று காங்கிரஸ் கூறவில்லை. கந்துவட்டி போல் கூடுதல் வரி விதிப்பதை தான் கண்டிக்கிறது. ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பலர் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே ஒரு கோடி பேர் வேலை இல்லாமல் உள்ளனர். வீழ்ச்சியிலிருந்து மீண்டும் மீள்வதற்கு மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசிடம் திட்டமிடல் இல்லாத காரணத்தால் தான் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கை மற்றும் பொருளாதார நெருக்கடியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்படும்.
காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட அந்தந்த கட்சிகள் போட்டியிட வேண்டும் என்பது எங்களது விருப்பம். எனினும் இடைத் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமையும், திமுக தலைமையும் இதுகுறித்து இறுதி முடிவு எடுத்து அறிவிப்பார்கள்.
இதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சி, சின்னம் இல்லாத பஞ்சாயத்துகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும். அரசியல் கட்சி, சின்னம் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து போன்ற இடங்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும். இந்தியாவில் இந்தி பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று அமித்ஷா கூறியது கண்டிக்கத்தக்கது. இது தவறான புள்ளி விபரம் ஆகும். இந்துக்கள் அதிகமாக இருப்பதால் இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை நிலைநாட்ட பாஜக அரசு நினைக்கிறது. மக்கள் விருப்பத்தை மீறி எதுவும் திணிக்க முடியாது. அவ்வாறு செய்தால் தேவையற்ற போராட்டங்கள், வன்முறைகளுக்கு வழிவகுக்கும்.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தேவையற்றது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு l, பன்னிரண்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு உள்ளது. இது போதுமானதாகும். தேர்வு முறை மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கக்கூடாது. இதன்மூலம் மேற்படிப்பு பாதிக்கும். ஒழுங்குபடுத்துவதற்கு தேர்வு முறை தேவைதான். அதற்காக குழந்தைகளின் எதிர்காலத்தை முடக்கக் கூடாது என்றார்.

Conclusion:திமுக-காங்கிரஸ் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.