ETV Bharat / city

"ஒரு கிலோ நகையைக் கணக்கு காட்டாத போலீசார்" - லலிதா ஜூவல்லரி கொள்ளையன் பகீர் வாக்குமூலம் - திருச்சி போலீஸ் மீது குற்றம் சாட்டிய திருடன்

திருச்சி: திருவாரூர் காவல் துறையினர் ஒரு கிலோ நகையைக் கணக்கு காட்டவில்லை என்று லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ்
லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ்
author img

By

Published : Dec 4, 2019, 6:21 PM IST

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை வாகனத்தில் உட்கார்ந்திருந்த சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது, 'தன் மீது பொய் வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளதாகவும், தனக்கு யாருமே கிடையாது என்றும் இது குறித்து நீதிபதியிடம் கூற முடியவில்லை என்றும்' கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 'கொள்ளையடித்த நகைகளைக் கொடுத்து விட்டதாகவும் இன்னும் தங்களிடம் நகை இருக்கிறது என்று காவல் துறையினர் தொந்தரவு செய்வதாகவும்; பொய் வழக்குகளைப் பதிவு செய்து அதிகமாக நகைகளைக் கணக்கு காட்டுவதாகவும்; லலிதா ஜூவலல்லரியில் கொள்ளையடித்த நகைகளின் விபரம் சரியாக தெரியவில்லை' என்றும் தெரிவித்தார்.

லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ் அதிர்ச்சி தகவல்

மேலும் 'திருவாரூரில் காவல் துறையினரிடம் தான் நகை இருந்த பையை போட்டு விட்டு ஓடிய போது அந்த பையில் 5,700 கிராம் நகை இருந்ததாகவும்; ஆனால் 4800 கிராம் நகையை தான் காவல் துறையினர் கணக்குக் காட்டினர் என்றும்; இதை கூறினால் தன்னை அடிக்க வருவதாகவும்' பேசினார்.

இதையும் படிங்க:

சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட உணவில் எலி; உத்தரப்பிரதேசத்தில் நடந்த அவலம்!

Intro:திரூவாரூர் காவல் துறையினர் ஒரு கிலோ நகையை கணக்கு காட்டவில்லை என்று லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ் கூறினார்.Body:

திருச்சி:
திரூவாரூர் காவல் துறையினர் ஒரு கிலோ நகையை கணக்கு காட்டவில்லை என்று லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ் கூறினார்.

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை வாகனத்தில் உட்கார்ந்திருந்த சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் மீது பொய் வழக்குகளை பதிவு போலீசார் பதிவு செய்கின்றனர். என்னை வெளியில் வாழ விடமாட்டார்கள் என நினைக்கிறேன். எனக்கு யாருமே கிடையாது. இது குறித்து நீதிபதியிடம் கூற முடியவில்லை. நாங்கள் எங்களிடம் இருந்த நகைகளை கொடுத்துவிட்டோம். ஆனால் இன்னும் எங்களிடம் நகை இருக்கிறது என்று கூறி போலீசார் டார்ச்சர் செய்கின்றனர். எனது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொய் வழக்குகளை பதிவு செய்து அதிகமாக நகைகளை கணக்கு காட்டுகின்றனர். லலிதா ஜூவலல்லரியில் எவ்வளவு கொளளை போனது என்பது தெரியவில்லை. திருவாரூரில் நான் தான் நகை இருந்த பையை போட்டுவிட்டு ஓடினேன். அந்த பையில் 5,700 கிராம் நகை இருந்தது. ஆனால் 4800 தான் கணக்கு காட்டினர். இதை கூறினால் என்னை அடிக்க வருகிறார்கள். நான் போலீசாரிடம் தான் இதை கூற முடியும். ஆனால் அவர்களே அடிக்க வருவதால் நான் யாரிடம் கூற முடியும் என்றார். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.