ETV Bharat / city

முசிறி அருகே மீன்பிடி திருவிழா கோலாகலம்!

author img

By

Published : Jun 16, 2022, 12:54 PM IST

முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு மீன்கள் பிடித்து உற்சாகமடைந்தனர்.

மீன்பிடி திருவிழா
மீன்பிடி திருவிழா

திருச்சி: முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். முசிறி தாலுகாவில் நெய்வேலி கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரி அண்மையில் பெய்த மழையினால் நிரம்பியிருந்தது. இந்நிலையில் கிராம மக்கள் ஒன்றுகூடி மீன் திருவிழா நடத்தத் திட்டமிட்டனர். அதன்படி, இன்று (ஜூன்16) ஏரியில் பொதுமக்கள் ஒன்று கூடினர்.

அப்போது பொதுமக்களுக்கு மீன் பிடிப்பதற்கு ஊராட்சி தலைவர் சைகை காட்ட, கரையில் நின்றிருந்த பொதுமக்கள் ஏரிக்குள் குதித்தனர். தங்களிடமிருந்த மீன்பிடி வலை, கூடைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனர். சிறுவர்-சிறுமிகள் கரையோரத்தில் துள்ளிக் குதித்த சிறு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

கிராம மக்கள் ஒன்று கூடிய மீன் பிடி திருவிழா

பாரம்பரிய முறையில் ஏரியில் மீன் பிடிக்கும் போது, சேற்று குளியல் உடலுக்கு ஆரோக்கியம் என்பதாலும், தண்ணீரில் உள்ள மீன் முட்டைகள் சேற்றில் அழுத்தப்படுவதால் மீண்டும் தண்ணீர் வரும் போது அந்த மீன்களின் முட்டைகள் பெரிந்து குஞ்சுகள் வளர்ச்சி அடையும் என்பதாலும் மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

மீன்பிடித் திருவிழாவின் போது கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த மீன்களும் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: 20 வருடங்களுக்கு மீன்பிடி திருவிழா - ஜாதி, மத வேறுபாடின்றி போட்டி போட்டு மீன் பிடித்த பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.