ETV Bharat / city

பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! - Women's Seminar in Trichy District

திருச்சி: "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!" என்ற மையக்கருத்தில் நடைபெற்ற கருத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுனிஷா, சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Trichy District
Trichy District Collector Participates in Women's Seminar
author img

By

Published : Nov 26, 2019, 1:19 PM IST

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!" என்ற மையக்கருத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார்.

பெண்களுக்கான கருத்தரங்கத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

அப்போது பேசிய அவர், "நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள் பலர் அரசு பொதுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று பல்வேறு பதவிகளில் உள்ளனர். சுமார் 50 விழுக்காடு பெண்கள் இவ்வாறு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் மேம்பாடும் வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது. சாதி, மதம் போன்ற பிற்போக்குத்தனமான காரணங்களால் இந்த நிலை கிராமப்புறங்களில் இன்னும் நீடிக்கிறது. அதனால் நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள், பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் பெண்கள் முன்னேற்றத்தில் சிறந்து விளங்குகிறது. அரசின் திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமில்லாமல் பெண்களை நேரடியாக சென்றடையும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்" என்றார்.

இவ்விழாவில் பெண் குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் விகிதாச்சாரம் மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கருத்தரங்கை முன்னிட்டு நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு ரதத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுனிஷா, சுகாதாரப் பணியாளர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

படித்தது ஆங்கில இலக்கியம்! பிடித்தது காளை வளர்ப்பு! - காளைகளின் தங்கச்சி கனிமொழி

Intro:கிராமப்புறங்களில் பெண்கள் மேம்பாடு குறைவாக உள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறினார் .Body:திருச்சி:
கிராமப்புறங்களில் பெண்கள் மேம்பாடு குறைவாக உள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறினார் .
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் மற்றும் திருமணத் தம்பதியர் மேலா, வரதட்சணை தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஆகிய தலைப்புகளில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுனிஷா தலைமை வகித்தார். அப்போது ஆட்சியர் சிவராசு பேசுகையில், நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள் பலர் அரசு பொதுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று பல்வேறு பதவிகளில் உள்ளனர். சுமார் 50 சதவீத பெண்கள் இவ்வாறு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி குறைவாக உள்ளது. ஜாதி, மதம் போன்ற பிற்போக்கு தனமான காரணங்களால் இந்த நிலை கிராமப்புறங்களில் நீடிக்கிறது. அதனால் நகர்புறத்தில் உள்ளவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள், பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவிலேயே தமிழகம் தான் பெண்கள் முன்னேற்றத்தில் சிறந்து விளங்குகிறது. அரசின் திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமில்லாமல் பெண்களை நேரடியாக சென்றடையும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார். விழாவில் பெண் குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் பாலின விகிதாச்சாரம் மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கை முன்னிட்டி பெண்கள் விழிப்புணர்வு ரதத்தை ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள், சுகாதாரப் பணியாளர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.