ETV Bharat / city

'அழுது புரண்டதால் அதிகம் ஒண்ணு' - திருச்சி காங்கிரஸ் களேபரங்கள் - Trichy Urban body Election

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியினருக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்படுவதாக இருந்த நிலையில், கூடுதலாக அதிகம் ஒரு சீட்டு கிடைத்துள்ளது.

Trichy corporation election congress candidates gets one more seat in DMK alliance

author img

By

Published : Feb 4, 2022, 5:22 PM IST

திருச்சி: திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி இருப்பது உறுதியான நிலையில், அதிருப்திக்கு அச்சாரம் போடப்பார்த்தார், ஸ்ரீரங்கம் பகுதிச்செயலாளர் ராம்குமார்.

திருச்சி காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் பகுதிச்செயலாளர் ராம்குமார், பணம் கட்டினார் என பெரும் சலசலப்பு கிளம்பிய நிலையில் கூட்டணி தொடருமா அல்லது கைகூடாதா என குழப்பத்தில் தவித்து வந்தவர்களுக்கு எண்டு கார்டு போட்டிருக்கிறது, காங்கிரஸ்.
வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான இன்று ஒருவழியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி,திமுக கூட்டணியில் 4 வார்டுகளே ஒதுக்கப்படும் என காங்கிரஸ் தொண்டர்கள் கூறிய நிலையில், கூடுதலாக ஒரு வார்டு ஒதுக்கி, மொத்தம் 5 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வார்டு எண் 1இல் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜவஹர், 24இல் விமலராணி சோபியா, 31இல் முன்னாள் மேயர் சுஜாதா, 39இல் திருநாவுக்கரசர் பி.ஏ. ரெக்ஸ், 41இல் தெற்கு மாவட்டச்செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

சீட்டு வாங்கவே இவ்வளவு பாடுபட்டுவிட்டோம். மக்களிடம் ஓட்டு வாங்க என உதட்டை பிதுக்கியபடி சந்தோஷமாக வெளியே வந்தனராம், காங்கிரஸ் தொண்டர்கள்

இதையும் படிங்க: 'திருச்சியில் முட்டி மோதும் மூவர்.. யாரு மேயர்?'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.