ETV Bharat / city

மகாராஷ்டிராவிலிருந்து 981 தமிழர்களுடன் கிளம்பிய சிறப்பு ரயில்

சோலாப்பூர்: மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு சிறப்பு ரயில் இன்று புறப்பட்டது. இந்த ரயிலில் 981 தமிழர்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

Train from Maharashtra to Trichy  Maharashtra to Trichy Train  Coronavirus  புலம்பெயர் தொழிலாளர்கள், மகாராஷ்டிரா, திருச்சி, ரயில், 981 தமிழர்கள், கரோனா பாதிப்பு  சோலாப்பூர்

author img

By

Published : May 9, 2020, 10:15 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரிலிருந்து சிறப்பு ரயில் சனிக்கிழமை (மே 9) மதியம் புறப்பட்டது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு திருச்சி வந்தடையும்.

இந்த ரயிலில் 981 பேர் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். முன்னதாக இந்தப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களிடம் பயணக் கட்டணமாக ரூ.560 வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் 22ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக நாடு தழுவிய முழு அடைப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆங்காங்கே தவித்துவந்தனர்.

அவர்களை ஒன்றிணைத்து இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக, நாடு முழுக்க வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் என பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 698 இந்தியர்களுடன் கொச்சிக்கு விரையும் ஜலாஷ்வா கப்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.