திருச்சி:மணப்பாறையை அடுத்த கருப்பூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட காயாமலையிலிருந்து கொல்லன் குளத்திற்குச் செல்லும் ஆற்றுவாரியை காணவில்லை என வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை வைத்தவர் அப்பகுதியை சமூக ஆர்வலர் குணசேகரன். புத்தாநத்தம் கடை வீதியில் இவர் வைத்த பேனர் இணையத்தில் வைரலானது. இதற்கான காரணம் குறித்து நேரில் சென்று கேட்ட போது அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பேனர் வைத்ததாக கூறினார்.
இது தொடர்பாக விவசாயி அருள்மேரி கூறுகையில் காயாமலையிலிருந்து கொல்லன் குளத்திற்கு வரும் ஆற்றுவாரியை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் வாரி வாய்க்காலாக மாறியுள்ளதாகவும் பெருமழையின் போது விவசாய பகுதிகளிலும் , குடியிருப்புகளிலும் நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக கவலை தெரிவித்தார்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகார அளவிலும் கடந்த மூன்று வருடங்களாக மனுக்கள் அளித்தும் பயனில்லை என தெரிவித்தார்.
இதையம் படிங்க: ஆதார் சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி