ETV Bharat / city

லாவோஸ் நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு எப்படி உள்ளது தெரியுமா? - பூர்வீகத் தமிழர்களால் தமிழ் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

சித்திரை முதல் நாளான இன்று (ஏப்.14) லாவோஸ் நாட்டில் வாழும் பூர்வீகத் தமிழர்களால் தமிழ்ப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு
author img

By

Published : Apr 14, 2022, 10:07 PM IST

Updated : Apr 14, 2022, 11:03 PM IST

வியன்டியான்(லாவோஸ்): தமிழ் மக்கள் ஒவ்வொரு தமிழ் ஆண்டின் படி, சித்திரை மாதத்தின் முதல் நாளில் "தமிழ்ப் புத்தாண்டு" உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் 1ஆம் தேதி, தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், தங்களின் வாழ்க்கை இன்பமும் இனிமையான அனுபவங்களும் இணைந்து அந்த ஆண்டு சிறப்பானதாக வேண்டும் என்று வழிபாட்டுத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்வது தொன்றுதொட்டு நடக்கும் வழக்கம்.

தமிழ் புத்தாண்டைக் கொண்டாடிய லாவோஸ் நாட்டு மக்கள்

பல்கிப்போன பிறமொழிக் கலாசாரங்களுக்கு இடையே “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி” என்ற புறப்பொருள் வெண்பா மாலையில் குறிப்பிடப்படும் உலகின் தொன்மையான சிறப்புமிக்க இனமாக, நம் தமிழ் இனம் என்று போற்றப்பட்டு வருகிறது. காலப்போக்கில் தென்குமரியில் தோன்றிய தொல் பழங்குடி தமிழர்களின் நாகரிகம், காலத்தின் தேவை மற்றும் கடற்கோள்கள் செய்த அழிவுகளினால் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து செல்லத்தொடங்கியது. பின், ஆங்காங்கே தனக்கு ஏதுவான இடங்களில் தலைமை அமைத்து கோலோச்சியது.

தற்போது வரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழ் பேசும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட, எத்தனையோ மக்கள் பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் சீனா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழர்களைப் போலவே, லாவோஸ் என்ற தென்கிழக்கு நாட்டிலும் தமிழ் மக்கள் உண்டு. அங்கு தமிழ்ப்புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

வியன்டியான் நகரை தலைநகராகக் கொண்ட அந்நாட்டில் வாழும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் அங்கு பௌத்தர்களாக வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் பெரும்பான்மையான மக்களுள் தமிழ் மரபுகளை கடைபிடிக்கும் வழக்கமும் உண்டு. தாங்கள் பௌத்தர்களாக மாறினாலும், சரிவர தமிழ் மொழியைப்பேசத் தெரியவில்லை என்றாலும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் தமிழ் கலாசாரத்தின் மீதும் உள்ள ஈடுபாட்டை வெளிப்படுப்படுத்தும் விதமாக, சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று (ஏப்.14) அங்கு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, லாவோஸில் வாழும் இந்திய தமிழரான குமார் என்பவர் நாம் ஈடிவி பாரத் ஊடகத்துடன் பகிர்ந்துகொண்டதாவது, 'இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் அம்மாவை ஊரைக்காட்ட அழைத்து வந்தேன். கரோனா தொற்று வந்துவிடவே தாய் நாட்டிற்குத் திரும்ப முடியவில்லை. அப்பாவும் இங்கேதான் எங்களோடு இருக்கிறார். நேற்று இரவே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நம்ம ஊரு பொங்கல் திருவிழாவைப் போல, போட்டிகளும் ஆட்டம் பாட்டமும் லாவோஸ் நாட்டில் களைகட்டுகிறது. இன்று இங்கேயும் பக்கத்து நாடான தாய்லாந்திலும்கூட புத்தாண்டு கொண்டாட்டம் தான்' என்று கூறினார்.

தமிழ் புத்தாண்டு விழா
தமிழ் புத்தாண்டு விழா

நாடு தாண்டி சென்றாலும், தமிழ்நாகரிகம் செழித்து வளரட்டும் என்று இந்த தமிழ்ப்புத்தாண்டு நன்னாளில் அனைவரும் சூளுரைப்போம்.

இதையும் படிங்க: தமிழ்ப் புத்தாண்டு: கனி காணும் நிகழ்ச்சியில் பக்தர்கள்!

Last Updated : Apr 14, 2022, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.