ETV Bharat / city

மீண்டும் பணி வழங்கக் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்! - செவிலியர்கள் போராட்டம்

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து மீண்டும் அவர்களுக்கு பணி வழங்ககோரி நேற்று (ஏப்.1) ஆட்சியர் அலுவலகத்தில் செவிலியர்கள் மனு அளித்தனர்.

செவிலியர்கள் சீற்றம்
செவிலியர்கள் சீற்றம்
author img

By

Published : Apr 2, 2022, 2:21 PM IST

திருச்சி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மற்றும் கரோனா வார்டில் பணியாற்றுவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 2021ஆம் ஆண்டில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு 60 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த செவிலியர்களின் ஒப்பந்தக்காலம் நேற்று முன்தினத்துடன் (மார்ச் 31) முடிந்தநிலையில், அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர் எனக் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே, உரியகாலத்தில் சம்பள பட்டுவாடா இல்லாமல், செவிலியர்கள் பலரும் கரோனா பாதிக்கப்பட்டும் பணியாற்றி வந்த நிலையில் திமுக அரசு தங்களை கைவிட்டுவிட்டதாகக்கூறி, தங்களுக்கு ஒப்பந்த செவிலியர் பணியிடத்தை மீண்டும் வழங்ககோரி நேற்று (ஏப்.1) பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.

அப்போது செவிலியர்கள் 3 மாதமாக சம்பளமும் வழங்காவிட்டாலும், சேவை செய்து வந்தோம் என்றும், கரோனா இல்லையென்பதற்கு காரணமான தங்களை பணிநீக்கம் செய்துள்ளது தங்களின் வாழ்வாதரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

மீண்டும் செவிலியர்கள் பணியமர்த்தக் கோரிக்கை

இதுமட்டுமன்றி திருச்சி மாவட்டத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்' முலம் 154 காலி பணி இடங்களில் ஓராண்டு சிறப்பாக பணியாற்றிவந்த தங்களில் 7 பேருக்கு மட்டுமே பணிவழங்கி பாரபட்சம் காட்டியுள்ளனர்.

தங்களுக்கான பணிவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாமல் தங்களுக்கு பணிபுரிந்ததற்கான சான்றிதழும் வழங்காமல் தங்களை தூக்கி எறிந்துவிட்டதாகவும், அரசு தங்களுக்கு மீண்டும் பணிவழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'அரசிதழில் அனுமதி இல்லாத பகுதிகளில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி இல்லை' - உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.