திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் தமிழழகன்(24). அஜித் ரசிகரான இவர் கடந்த 7ம் தேதி சினிமாவுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொன்மலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழழகனை தேடி வந்தனர்.
இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாயமான தமிழழகன் கடந்த 7ஆம் தேதி பொன்மலை பகுதியில் தனது நண்பர்கள் ஆட்டோ ஜெகன், கார்த்திக், மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 3 பேரும் தமிழழகனை அடித்துக் கொலைசெய்து பொன்மலை பகுதியில் உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் எரித்துள்ளனர்.
இதையடுத்து காவல் துறையினர் மூன்று பேரையும் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நடந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடலை எரித்ததாக கூறப்படும் கணேஷபுரம் சுடுகாட்டில் தமிழழகனின் எலும்புகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நெருங்கிய நண்பர்களாலேயே தமிழழகன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.