திருச்சி மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கீழத் தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரின் மகள் மௌலிகா (18). இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று வலி அதிகமாகவே வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார்.
இதை அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மௌலிகா தாயார் அவரை உடனடியாக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க:சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவில்லை; கர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்ற உறவினர்கள்!