ETV Bharat / city

மத்திய அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது -எஸ்ஆர்எம்யூ கண்ணையா குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 29, 2019, 3:40 PM IST

திருச்சி: ஆளும் மத்திய அரசு மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக செயல்படுகிறது என எஸ்ஆர்எம்யூ மாநில பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது -எஸ்ஆர்எம்யூ கண்ணையா குற்றச்சாட்டு!

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கண்ணையா தலைமை வகித்தார்.

அப்போது பேசிய கண்ணையா, ’ரயில்வே துறையில் 100 நாள் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேஜஸ் ரயிலை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஐஆர்சிடிசி என்ற ஏஜென்சியிடம் ஒரு ரயிலை 60 கோடி ரூபாய்க்கு கொடுக்க உள்ளனர். இதனால் பயண கட்டணம் உயர்வது மட்டுமின்றி, 1947ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்து வழங்கப்படும் டிக்கெட்டிற்கான மானியம் ரத்தாகும்’ என்றார்.

மத்திய அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது -எஸ்ஆர்எம்யூ கண்ணையா குற்றச்சாட்டு!

மேலும் பேசிய அவர், ’ஆளும் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது’ என்று குற்றம்சாட்டினார்.

Intro:எஸ் ஆர் எம் யூ மாநில பொதுச்செயலாளர் கண்ணையா திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

Body:திருச்சி:
ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்து மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்று எஸ் ஆர் எம் யூ மாநில பொதுச்செயலாளர் கண்ணையா கூறினார்.
எஸ் ஆர் எம் யூ சார்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் இன்று திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கண்ணையா தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தார்.
அப்போது கண்ணையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய பாஜக அரசு தொழிலாளர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இந்த வகையில் ரயில்வே துறையில் 100 நாள் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தவுள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜாஸ் ரயிலையும், கோவை யில் இருந்து சென்னை செல்லும் தேஜாஸ் ரயிலையும் தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இதேபோல் லக்னோவில் இருந்து டெல்லி செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலையும் தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி என்ற ஏஜென்சியிடம் ஒரு ரயிலை 60 கோடி ரூபாய்க்கு கொடுக்க உள்ளனர். இதன் மூலம் பயண கட்டணத்தை தனியார் அவர்கள் இஷ்டத்திற்கு நிர்ணயம் செய்வார்கள். அதோடு 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்து வழங்கப்படும் ஒரு டிக்கெட்டிற்கான மானியம் ரத்தாகும்.
இதனால் அடித்தட்டு மக்கள் ஒரு காலத்தில் விமானத்தை அதிசயமாக பார்த்தது போல் ரயிலையும் அதிசயமாக பார்க்க வேண்டிய நிலை வரும்.
சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை உட்பட 7 பணிமனைகளையும் தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரயில்வே தொழிலாளர்களால் 50 சதவீத உற்பத்தி அதிகரித்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனினும் அதை கார்ப்பரேஷன் ஆக மாற்ற முடிவு செய்து உள்ளோம் என்று அமைச்சர் கூறியது வருத்தம் அளிக்கிறது. ரயில்களை தனியாருக்கு ஒப்படைப்பதன் மூலம் ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி, முதலில் நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் தான் பாதிக்கப்படுவார்கள். அதனால் மக்களை இணைத்து போராட்டம் நடத்தப்படும். இதற்காக மக்களிடம் சென்று பிரச்சினைகளை எடுத்துக் கூறி போராடி தடுத்து நிறுத்துவோம். தனியார் மயத்தால் ரயில்வே துறைக்கு அதிக பாதிப்பு இல்லை. மக்களுக்கு தான் முதல் பாதிப்பு. இது அரசியல் சார்ந்த போராட்டம் கிடையாது. மக்களுக்கும் ரயில்வே கும் சார்ந்த போராட்டமாகும் என்றார்.

Conclusion:ரயில்களை தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் இஷ்டத்திற்கு பயண கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள் என்று கண்ணையா கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.