திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாலகுறிச்சியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குழந்தைவேல் என்பருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலம் தொடர்பாகப் பிரச்சினை இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் இன்று மீண்டும் குழந்தைவேல் குடும்பத்தினருக்கும் சுப்பிரமணி குடும்பத்தாருக்கும் பிரச்சினை எழுந்துள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் குழந்தைவேல் குடும்பத்தினர் சுப்பிரமணி குடும்பத்தினரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சுப்பிரமணியின் மனைவி தலையில் பலத்த காயத்துடனும், மகள்கள் லேசான காயத்துடனும் மணப்பாறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட குழந்தைவேல், அவரது மனைவி இலக்கியா, மகன் தினேஷ் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்பிரமணி உறவினர்கள் அளித்த புகாரை வளநாடு காவல் நிலையத்தில் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுப்பிரமணி மனைவி தனது இரு மகள்களுடன் மருத்துவமனையின் முன்பு உள்ள மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மணப்பாறை காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலில் ஈடுபட முயன்றதை கைவிட்டனர்.
இதையும் படிங்க: மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து போராட்டம்!