திருச்சி: திருவானைக்கோவில் களஞ்சியம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரும், திருச்சி தேவதானம் பகுதியைச் சேர்ந்த சந்துருவும் உறவினர்கள். இதில், சிவக்குமாரின் மனைவி காலமாகிவிடவே அதற்கு காரணம் சிவக்குமார்தான் எனக் கருதிய சந்துரு, சிவக்குமாரை கொலை செய்ய அரிவாளுடன் போக்குவரத்து மிகுந்த சாலையில் விரட்டிச்சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
துரிதமாக செயல்பட்ட ஸ்ரீரங்கம் காவல் துறையினர், சந்துருவை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு பின்னர் அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: லாரி மீது பைக் மோதிய விபத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சி