ETV Bharat / city

குடிநீர் வழங்காமல் ஊராட்சி மன்ற நிர்வாகம் அலட்சியம் - பொறுமையிழந்த பொதுமக்கள் சாலை மறியல் - complaint on panchayat administration

மணப்பாறை அருகே ஆறு நாட்களாக குடிநீர் வழங்காமல் அலட்சியம் செய்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தை எதிர்த்து பொதுமக்கள் இன்று (ஜன.20) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Trichy District Manapparai
திருச்சி மாவட்டம் மணப்பாறை
author img

By

Published : Jan 20, 2022, 5:44 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அண்ணாநகர்ப் பகுதி பொதுமக்களுக்கு கடந்த ஆறு நாட்களாக காவிரி குடிநீர் கிடைக்கவில்லை.

இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கொந்தளித்த அப்பகுதி பொதுமக்கள், இன்று(ஜன.20) சாலையின் குறுக்கே காலிக் குடங்களுடன் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் காவல் துறையினர், ஊராட்சி மன்றத் தலைவர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் காவிரி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்கள். பின்னர் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் சாலை மறியல்
பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு நடந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் புத்தாநத்தம்-துவரங்குறிச்சி சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த திடீர் சாலை மறியலில் பெண்கள் உட்பட பலர் போராட்டம் செய்தனர்.

இதையும் படிங்க: அதிமுகவை அழித்துவிட வேண்டும் நோக்கத்தில் விடியா திமுக அரசு செயல்படுகிறது - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.