திருச்சி: துவாக்குடி காவல் துறையினர் சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்ட காவல் துறை எஸ்பி அலுவலகத்தில் இருந்து தகவல் ஒன்று அளிக்கப்பட்டது.
அதில், நாகையைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ஒருவர் ஓட்டிவரும் கடத்தல் கும்பலின் வௌ்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று வேகமாக வருவதாகவும், அதனை மடக்கிப் பிடிக்கும்படி கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேரி கார்டு அமைத்து அந்தக் காரை மடக்கிப் பிடிக்க துவாக்குடி காவல் துறையினர் காத்திருந்தனர். தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கிவந்த அந்தக் காரை காவல் துறையினர் நிறுத்த முயன்றபோது நிற்காமல் தடுப்பு கட்டைடை இடித்துத் தள்ளியது.
கார் இடித்து தள்ளிய தடுப்புக்கட்டை மோதி அங்கு நின்றிருந்த உதவி ஆய்வாளர் சுரேஷ் கீழே விழுந்து காயமடைந்தார். அப்போது காரை ஓட்டிச் சென்ற நபர் கொன்றுவிடுவேன் என்று ஒரு விரலை நீட்டி கையை வௌியில் காட்டி எச்சரிக்கை செய்தபடி மின்னல் வேகத்தில் சென்றுள்ளார்.
இது குறித்து துவாக்குடி காவல் துறையினர் திருச்சி மாநகர காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் துறையினர் தயாராகக் காத்திருந்தனர். ஆனால் திருச்சி மாநகர எல்லைக்குள் அந்த வௌ்ளை நிற ஸ்கார்பியோ கார் வரவில்லை.
மாநகர எல்லைக்கு முன்பாக உள்ள ஏதேனும் வேறு பாதையில் சென்றிருக்கலாம் எனத் தொியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து துவாக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கடத்தல் காரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி அடித்துக் கொலை? - தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு