ETV Bharat / city

அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் கூச்சலிட்ட பெரம்பலூர் விவசாயிகள் - Perambalur farmers accused that they were not given pesticide machine

திருச்சி: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்ட விழாவில் தங்களுக்கு மருந்து தெளிக்கும் கருவிகள் வழங்கப்படவில்லை என்று பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Minister vellamandi natarajan, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

author img

By

Published : Feb 13, 2020, 6:59 PM IST

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இதன் தொடக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் கைத் தெளிப்பான் கருவி வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் அங்கு வந்திருந்தனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் மருந்து தெளிக்கும் கருவியை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து ஆட்சியர் மற்றும் பிற அலுவலர்களும் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரம்பலூர் விவசாயிகள் தங்களுக்கு கருவி வழங்கப்படவில்லை என்று அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் கூச்சலிட்ட பெரம்பலூர் விவசாயிகள்

மேலும், திருச்சி, அரியலூர் விவசாயிகளுக்கு மட்டும் கருவிகள் வழங்கப்பட்டதாகவும், பெரம்பலூரில் இருந்து வந்திருந்த 60 விவசாயிகளில் ஒருவருக்கு கூட கருவி வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, இந்த விஷயத்தில் அரசு அலுவலர்கள் உடனடியாக தலையிட்டு, விவசாயிகளுக்கு கருவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மருந்து தெளிப்பான் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதியளித்த பின்னர் விவசாயிகள் சமாதானம் அடைந்தனர். அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் விவசாயிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'அதிமுக வெற்றி பெற வாழ்த்துக் கூறிய கமலுக்கு நன்றி' - புதுவித விளக்கமளித்த ஆர்.பி. உதயகுமார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.